சென்னை: அம்மா உணவகத்தில் உணவு தரம் இல்லை என தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
அம்மா உணவகத்தில் உணவு தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு தினந்தோறும் வருகிறது என சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின், ‛ அம்மா உணவகத்தில் உணவு தரம் இல்லை என குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.
அமைச்சர் நேரு கூறுகையில், அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை; ஒரு இடத்தில் கூட மூடப்படவில்லை. அம்மா உணவகத்துக்கு கடந்த ஆட்சியை விட அதிகமாகவே நிதி ஒதுக்கி வருகிறோம் எனக் கூறினார்.