பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் யுத்தத்தில் இறங்கிய ஆம்ஆத்மி

Updated : மார் 30, 2023 | Added : மார் 30, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடிக்கு எதிராக டில்லியில் ஆம்ஆத்மி கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டில்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதன் வெளிப்பாடாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி போஸ்டர்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் ‛மோடியை நீக்குங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்' என ஆம்ஆத்மி
Should Indian PM be educated?: Posters in Delhi question Modis educational qualificationபிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் யுத்தத்தில் இறங்கிய ஆம்ஆத்மி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு எதிராக டில்லியில் ஆம்ஆத்மி கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டில்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதன் வெளிப்பாடாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி போஸ்டர்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் ‛மோடியை நீக்குங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்' என ஆம்ஆத்மி கட்சியினர் போஸ்டர் ஒட்டினர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்ட வழக்குகளை போட்ட போலீசார், 6 பேரை கைது செய்தனர். இதற்கு பதிலடியாக, ‛கெஜ்ரிவாலை நீக்குங்கள், டில்லியை காப்பாற்றுங்கள்' என்ற வாசகங்களுடன் பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டினர்.



latest tamil news

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், ‛எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஜனநாயகத்தில் ஒரு தலைவருக்கு ஆதரவாகவோ, அல்லது எதிராகவோ தங்களது பார்வைகளை வெளியிட அனைவருக்கும் உரிமை உள்ளது. எனவே, போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய வேண்டாம்' என்றார்.


இந்த நிலையில், தற்போது டில்லியில் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடியின் கல்வி தகுதி பற்றி ‛இந்திய பிரதமருக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டுமா?' என்ற கேள்வியுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

30-மார்-202322:08:27 IST Report Abuse
Saai Sundharamurthy AVK கெஜ்ரிவால் ஒன்றும் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்று IIT யில் சேரவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவரிடம் அப்படியொரு மார்க் சீட் கிடையாது. எல்லாம் ஒரு தொழிலதிபரின் இரண்டு சீட் கோட்டாவில் ஒன்றை வாங்கி நேரடியாக சேர்ந்து படித்தவர். எல்லாம் பீலா விட்டுக் கொண்டு இருக்கிறார். யாருக்கோ கிடைக்க வேண்டிய சீட்டை குரங்கு போல் மிரட்டி கவ்விக் கொண்டு போனவர் தான் இந்த கேஜ்ரிவால்.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
30-மார்-202316:59:25 IST Report Abuse
Sankar Ramu இதே ஸ்டாலின் பத்தி டிவிட் போட்டாலே சிறைதான் இரவோட இரவாக 😀
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
30-மார்-202316:57:34 IST Report Abuse
Sankar Ramu படித்த ஸ்டாலின் ஆட்சியை மக்கள் பார்துகிட்டுதான் அருக்காங்க. பால் எடைய கூட சரியா கொடுக்க முடியாத அரசு 😭
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X