வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஜி 20 வெளிநாட்டு குழுவினர் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்கார் விருதை 'ஆர்ஆர்ஆர்' தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் வென்றது. இதையடுத்து இந்த பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில், இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழான வேளாண் பணி குழுவின் 2-வது வேளாண் குழுவினர் கலந்து கொண்ட கூட்டம் பஞ்சாப்பின் சண்டிகரில் நடந்தது.

இதில், வெளிநாட்டு குழுவினர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நடன கலைஞர்கள் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினர். இதனை பார்த்த வெளிநாட்டு குழுவினர் நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி ஜி-20 வெளிநாட்டு குழுவினர் அசத்தியுள்ளனர் என தங்களது கருத்துகளை, மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.