புதுடில்லி: வெளிநாட்டு தலையீடுகளால் இந்தியாவின் நீதிமன்ற அமைப்பு மீது செல்வாக்கு செலுத்த முடியாது என கிரிண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என ஜெர்மனி கருத்து தெரிவித்து இருந்தது. இந்த விவகாரத்தில் ஜெர்மனி தலையிட்டதற்கு காங்., மூத்த தலைவர் திக் விஜய சிங் நன்றி தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதனை சுட்டி காட்டி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கை: வெளிநாட்டு சக்திகளை இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வர வழைத்ததற்காக ராகுலுக்கு நன்றி. நினைவில் கொள்ளுங்கள்.
வெளிநாட்டு தலையீடுகளால் இந்தியாவின் நீதிமன்ற அமைப்பு மீது செல்வாக்கு செலுத்த முடியாது. வெளிநாட்டு செல்வாக்கை இந்தியா எந்த வகையிலும் சகித்து கொள்ளாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.