வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடவுள் ராமர், கல் அல்லது மரத்தால் ஆன வெறும் சிலை அல்ல. அவர் நமது நாட்டின் அடையாளம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ராமநவமியை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கான நிலை உருவான போது பலரும் பல்வேறு விதமான யோசனைகளை கூறினர். அந்த இடத்தில் மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும், பள்ளிக்கூடம் அமைக்கலாம் என்றனர். வேறு சிலரோ அங்கு தொழிற்சாலை அமைக்கலாம் என யோசனை கூறினர். இவர்கள் அனைவரும் கடவுள் ராமரை புரிந்து கொள்ளாதவர்கள்.

கடவுள் ராமர் கல் அல்லது மரத்தில் உருவான வெறும் சிலை அல்ல. அவர் இந்த நாட்டின் கலாசாரத்தின், நம்பிக்கையின் மையம். நாம் மருத்துவமனை கட்டுவோம். பள்ளிக்கூடம் கட்டுவோம். தொழிற்சாலைகள் அமைப்போம். அதுபோலவே ஆலயங்களையும் எழுப்புவோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.