இந்தியாவின் 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை இந்த ஆண்டு வென்றுள்ளது. நெட்பிளிக்ஸில் வெளியான அந்த ஆவணப்படத்தை கார்த்திகி கொன்சால்வஸ் இயக்கியுள்ளார். தமிழகத்தின் முதுமலைப் பகுதியில் 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' படமாக்கப்பட்டது. இப்படத்தை குனீத் மோங்கா என்கிற பெண் தயாரிப்பாளர் தயாரித்து வெளியிட்டுள்ளார்.
யானைப் பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளியின் கதைதான் இந்த ஆவணப்படம். ஆஸ்கர் விருதை இந்திய நாட்டுக்கு அர்பணிப்பதாக கார்த்திகி கொன்சால்வ்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவையும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையையும் இப்படம் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
![]()
|
தற்போது இந்தப் படக்குழுவினர் பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆஸ்கர் விருதை அவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதுகுறித்து பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.