வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அகர்தாலா: திரிபுரா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பான நடந்து கொண்டிருந்த போது பா.ஜ. எம்.எல்.ஏ., ஒருவர் தனது மொபைலில் ' அந்த மாதிரி ' படம் பார்த்ததாக புகார் எழுந்தது.
திரிபுரா மாநிலத்திற்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக மாணிக்க சஹா மீண்டும் பதவியேற்றார்.
![]()
|
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பா.ஜ. எம்.எல்.ஏ., ஜாவத்லால் நாத் என்பவர் சபை நடவடிக்கையை கவனிக்காமல் தனது மொபைலில் 'அந்த மாதிரி' படங்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததார். இதனை பின்புறம் அமர்ந்திருந்த ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். அந்த வீடியோ வைரலானது.
நடந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.எம்.எல்.ஏ, ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.