வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்பட்ட ராமநவமி விழா கொண்டாட்டம் வன்முறையில் முடிந்ததால் பதற்றம் காணப்படுகிறது.
மேற்குவங்கம்
மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் இன்று ராமநவமி விழா கொண்டாட்டம் கோலகலமாக துவங்கியது. அபபோது இரு தரப்பு மோதல் வன்முறையாக உருவெடுத்தது.
இந்த வன்முறை சம்பவத்தில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. விழாவில் பங்கேற்ற பா.ஜ.வைச் சேர்ந்த சிலர் வாள், கத்தி, போன்ற ஆயுதங்களுடன் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
![]()
|
அரசு பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அமைதி காக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தவன்முறை சம்பவத்தில் அரசியல் பின்னணி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத்
இதே போன்று குஜராத் மாநிலம் வதோதராவில் ராம நவமி பண்டிகையினையொட்டி, இன்று யாத்திரை நடந்தது. இந்த யாத்திரை பதேபுராவில் உள்ள மசூதி அருகே வந்போது நடந்த இரு தரப்பு மோதல் வன்முறையில் கல்வீச்சு தாக்குதல் சம்பவம் நடந்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்றுள்ளனர். எனினும் அங்கு பதற்றம் காணப்படுகிறது.
மாகாராஷ்டிரா
மாகாராஷ்டிரா மாநிலத்தில் சம்பாஜி நகரிலும் வாகனங்கள் அடித்து நொறுக்கியும், கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.