வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் தண்ணீர் பற்றாகுறை காரணமாக நோயாளிகளுக்கு நடைபெற வேண்டிய ஆபரேசன் ரத்து செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் பல்வேறு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடக்க வேண்டிய அறுவை சிகிச்சை அனைத்தும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் நோயாளிகளும், அவர்களுடன் தங்கி இருந்தவர்களும் காரணம் தெரியாமல் பரிதவித்து வந்தனர்.
![]()
|
இது தொடர்பாக காரணம் கேட்டதற்கு மருத்துவமனைக்கு தினமும் 2 லட்சம் லிட்டர் அளவுக்கு தண்ணீர் தேவை. அருவிக்கார அணையிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அது நிறுத்தப்பட்டதால், 25 பேருக்கு நடைபெறவிருந்த ஆபரேசன் ரத்து செய்யப்பட்டதாக பதில் கூறப்பட்டது.
இது குறித்து கேரள மாநில சுகாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தலையீட்டின் பேரில்,அரசு மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. ஆபரேசன் ரத்து செய்யப்பட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவமனை மற்றும் அதனை சுற்றி உ்ளள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் தொட்டியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதன் காரணமாக 28 மற்றும் 29 ம் தேதிகளில் குடிநீர் சப்ளை இருக்காது என மக்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் எதிர்பாராதவிதமாக மின்சப்ளை துண்டிக்கப்பட்டதால் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டதே இதற்கு காரணம் என தெரிவித்து உள்ளனர்.