வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : புதிய ரவுடிகளை கணக்கெடுத்து, பட்டியலை அனுப்புமாறு, அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதி, சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல், ரவுடி மற்றும் கூலிப் படை மீது நடவடிக்கை எடுக்க, தமிழக காவல் துறையில் அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவு செயல்படுகிறது.
இப்பிரிவுக்கு, டி.ஜி.பி., சைலேந்தரபாபு பிறப்பித்துள்ள உத்தரவு:
* காவல் நிலைய பட்டியலில் இல்லாத ரவுடிகள் மற்றும் ஜாமினில் வெளிவந்துள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
![]()
|
* கொலை வழக்கில் சிக்கிய ரவுடிகள் மீது நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பிடியாணைகளை செயல்படுத்த வேண்டும்.
* குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப, 'ஏ பிளஸ், ஏ, பி, சி' பிரிவு என, ரவுடிகளை வகைப்படுத்த வேண்டும்
* ரவுடிகளுக்கு அடைக்கலம் தருபவரையும் கைது செய்ய வேண்டும்.
* புதிதாக ரவுடியிசத்தில் ஈடுபடும் நபர்களை பற்றி அனைத்து தகவல்களுடன் பட்டியல் தயாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.