வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணியில் என்.ஐ.ஏ. தனிப்படையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் அக். 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில் ஐ.எஸ். பயங்கரவாதி ஜமேஷா முபீன் 29 பலியானார். ஆரம்ப கட்டத்தில் கோவை மாநகர போலீசார் கையாண்ட இந்த வழக்கு தற்போது மத்திய அரசின் என்.ஐ.ஏ. தனிப்படையினரால் விசாரிக்கப்படுகிறது.
இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளை சதித்திட்டத்தில் தொடர்புடைய பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
![]()
|
கார் குண்டு வெடிப்பு நடந்து ஐந்து மாதங்கள் கடந்து விட்டன. 'உபா' சட்டப்படி பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் ஜாமினில் விடுதலையாகவும் வாய்ப்புள்ளது.
அந்த சூழ்நிலையை தவிர்க்க ஏப்ரல் மாத இறுதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான தயாரிப்பு பணிகள் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் தீவிரமாகியுள்ளன.