சென்னை : தென் மாநிலங்களின்வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தமிழகம், புதுச்சேரியில், இன்று(மார்ச் 31) முதல் வரும், 3ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, ஈரோடு, கரூர் பரமத்தியில், 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையத்தில், 38 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.