''ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்ல, தன் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத்தை நிறுத்த தான், இளங்கோவன் விரும்பினார் என்கிற சங்கதி ஊருக்கே தெரியும் ஓய்... என அடுத்த தகவலை தொடர்ந்தார் குப்பண்ணா.
''ஆனா, முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, 'நீங்க தான் நிக்கணும்'னு அழுத்தம் குடுத்ததால, இளங்கோவனும் மனசை மாத்திண்டார்... தேர்தல்ல ஜெயிச்சிட்டாலும், மாறி மாறி உடம்பு படுத்திண்டே இருக்கு... இப்ப வரைக்கும் ஆஸ்பத்திரியிலயே இருக்கார் ஓய்...
![]()
|
''தொகுதி மக்களுக்கு, தி.மு.க.,வினர் நன்றி சொன்னாலும், எம்.எல்.ஏ., வராதது குறையாதான் இருக்கு... இதனாலயோ என்னமோ, அரசு விழாக்கள்ல, இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத்தையும் உட்கார வைக்கறா ஓய்...
''காங்., நிகழ்ச்சிகள்லயும் முக்கியத்துவம் குடுக்கறா... இப்போதைக்கு அப்பாவுக்கு பதிலா, மகன் முகத்தை பொது வெளியில காட்டி நிலைமையை சமாளிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.