புதுடில்லி: நாட்டின் சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்த, முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, இந்தோர் மற்றும் நாக்பூர் ஆகிய நான்கு நகரங்களில், 'பன்முக சரக்கு போக்குவரத்து பூங்கா'வை கட்டமைக்க உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
சென்னைக்கு, 1,423.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 184.27 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைய உள்ளது. இதேபோல், நாடு முழுவதும், கோவை, புனே உட்பட 35 நகரங்களில், இந்த பூங்காவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது, பன்முக போக்குவரத்து பூங்கா என்பது, குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சரக்கு கையாளும் வசதி ஆகும். இங்கு, பலவித சரக்கு போக்குவரத்துக்கான வசதி, குளிர் சேமிப்பு கிடங்குகள், சரக்கு முனையங்கள் என பல்வேறு சரக்கு கையாளும் வசதிகள் இருக்கும்.