ராமநாதபுரம்-ராமநாதபுரம் அருகே புல்லங்குடியில் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார்.
செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி முன்னிலை வகித்தார். முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலை வளர்ச்சி கழக டீன் (பொ) சிவக்குமார் மாணவர்களுக்கு பட்டங்கள், சான்றிதழ்களை வழங்கினார். மாணவர்கள் நாட்டிற்கும், பெற்றோருக்கும் செய்ய வேண்டிய கடமைகள், உயர்கல்விக்கு பின் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார்.
விழாவில் 80 பேருக்கு முதுகலை பட்டம், 794 பேருக்கு இளங்கலை பட்டம் வழங்கப்பட்டது. அழகப்பா பல்கலை அளவில் முதலிடம் பெற்ற 6 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். 27 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களை பெற்றுள்ளனர்.
நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, சபியுல்லா, பேராசிரியர்கள் அயாஸ் அகமது, ஜெனத்மிஸ்ரியா, ஸ்டாலின், பாலமுருகன் பங்கேற்றனர்.