கூடலுார் : முல்லைப்பெரியாறு அணை போராட்ட வழக்கில் கூடலுாரை சேர்ந்த 21 பேரை, தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான பிரச்னையில் உச்ச நீதிமன்றம் உத்தரவை மதிக்காத கேரள அரசை கண்டித்து, 2011ல் கூடலுார், லோயர்கேம்ப், கம்பம் பகுதிகளில் மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டம் கலவரமாக வெடித்து இரு மாநில எல்லையில் பிரச்னை ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட, கூடலுாரை சேர்ந்த 21 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பின; வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வழக்கை விசாரித்த தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் கூடலுாரை சேர்ந்த, 21 பேரையும் நேற்று விடுதலை செய்தது.