புதுச்சேரி: '' மறைந்த பிரதமர் வாஜ்பாய், மறைந்த தமிழக முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு புதுச்சேரி அரசு சார்பில் விழா எடுக்கப்படும்,'' என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தியாகி செல்லான் நாயக்கர் ஆகியோருக்கு புதுச்சேரி அரசு சார்பில் விழா எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் ரங்கசாமி கூறினார்.