சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி காங்., - எம்.எல்.ஏ., இளங்கோவன், 74, கொரோனா மற்றும் இதய பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகிறார் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இம்மாதம், 15ம் தேதி இரவு, இளங்கோவனுக்கு, 74, திடீரென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் சுதாகர் சிங் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், 'இதய பாதிப்பு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளங்கோவன், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றபடி, பாதிப்புகளிலிருந்து மீண்டு வருகிறார்' என, தெரிவித்துள்ளார்.