சென்னை: இன்று(மார்ச் 31) துவங்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியால், மின் தேவை வழக்கத்தை விட கூடுதலாக, 200 மெகா வாட் வரை அதிகரிக்கும் என, மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது. இந்த வாரம் துவக்கத்தில் இருந்து வெயில் சுட்டெரிப்பதால், மின் தேவை 17 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, இன்று இரவு துவங்கி, மே மாதம் வரை நடக்கிறது. அனைவரும் 'டிவி' மூலம் போட்டியைப் பார்ப்பதால், மின் தேவை, 200 மெகா வாட் வரை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மின் சப்ளைக்கு, மின் வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.