வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த விரைவில் முடிவு எடுக்கப்படும்'' என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறினார்.
சட்டசபையில் அவரது பதிலுரை:
கடந்தாண்டு ஆறு நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
![]()
|
அடுத்தாண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிகிறது. அப்போது ஊரக உள்ளாட்சிகளை எந்த நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கலாம் என்பது குறித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துபேசி இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு நேரு கூறினார்.