வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: 'புதுச்சேரியில், இரு இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்' என பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார்.
சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது: புதுச்சேரியில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தும் வரை, நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ள சிவப்பு மண்டல பகுதிகளில், சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கேன் குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
![]()
|
கடல் நீரை குடிநீராக்கும் வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் உப்பளம், பிள்ளைச்சாவடியில் அமைக்கப்படும். நிலத்தடி நீர் சேகரிப்பு அமைப்புகளை அமைக்காத வீடுகள், கட்டங்களுக்கு அபராதம் விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.