தமிழ் மொழியை, திராவிட மாடல் அரசு வளர்த்த லட்சணம் இதுதானா?

Added : மார் 31, 2023 | கருத்துகள் (19) | |
Advertisement
தமிழக முதல்வர் ஸ்டாலின்: எங்கள் தாய்மொழியை தள்ளி வைக்க சொல்கிறது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள். ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள். குழந்தையை கிள்ளிவிட்டு, சீண்டி பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள்.டவுட் தனபாலு:
Is this the aim of the Dravidian model government to develop the Tamil language?  தமிழ் மொழியை, திராவிட மாடல் அரசு வளர்த்த லட்சணம் இதுதானா?

தமிழக முதல்வர் ஸ்டாலின்: எங்கள் தாய்மொழியை தள்ளி வைக்க சொல்கிறது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள். ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள். குழந்தையை கிள்ளிவிட்டு, சீண்டி பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள்.


டவுட் தனபாலு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வுல, ஐந்து லட்சம் பேர் தமிழ் பாடத்துல தோல்வி அடைஞ்சிருக்காங்களே... தமிழ் மொழியை, திராவிட மாடல் அரசு வளர்த்த லட்சணம் இதுதானா என்ற, 'டவுட்' எழுதே!


***


நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: நானும், முதல்வரும், கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றோம். அப்போது கவர்னர், என் வயது குறித்து கேட்டார். அதற்கு முதல்வர், 'என் அப்பாவுடன், 53 ஆண்டுகள் கூடவே இருந்தவர்' என, என்னை பற்றி கூறினார். அப்போது, உதயநிதி அந்த பக்கம் அமர்ந்திருந்தார். நான் கவர்னரிடம், 'உதயநிதிக்கு ஒரு மகன் இருக்கிறான். அவருடனும் நான் தான் இருப்பேன்' என்றேன்.


latest tamil news

டவுட் தனபாலு: 'உதயநிதி மகன் அமைச்சரவையிலயும் பணிபுரிவேன்' என்பதன் வாயிலாக, 'தி.மு.க.,வின் தலைமை பீடத்தை, கருணாநிதி குடும்பத்துக்கு பட்டா போட்டு குடுத்தாச்சு... அதுக்கு யாரும் ஆசைப்படாதீங்க' என்பதை நாசுக்கா சொல்றீங்களோ என்ற, 'டவுட்' எழுதே!


***


பத்திரிகை செய்தி: நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா, தன் லாக்கரில் இருந்து, 3.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமானதாக புகார் அளித்த நிலையில், வீட்டு பணிப்பெண்ணிடம் இருந்து, 3 கோடி ரூபாய் மதிப்பிலான 100 சவரன் நகைகள், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி, 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


டவுட் தனபாலு: புகாருக்கும்,பறிமுதலுக்கும் இடையில மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் இருக்குதே... நேர்மையான போலீசாரா இருந்ததால, நிஜமான கணக்கை காட்டியிருக்காங்க... இல்லை என்றால், புகாரில் குறிப்பிட்ட நகைகளை மட்டும் திருப்பி தந்துட்டு, மிஞ்சியதை, 'லவட்டி' இருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
31-மார்-202317:26:59 IST Report Abuse
venugopal s சரி, உங்கள் கருத்துப் படியே திமுக தமிழை வளர்க்கத் தவறிவிட்டது என்பதற்காக இப்போது பாஜக செய்யும் ஹிந்தித் திணிப்பை சகித்துக் கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா? ஒரு தவறு மற்றொரு தவறை நியாயப் படுத்த முடியாது!
Rate this:
Cancel
ramtest - Bangalore,இந்தியா
31-மார்-202312:49:47 IST Report Abuse
ramtest அப்போ இதுக்கு தீர்வு ஹிந்தி கற்றுக்கொள்வது அதானே??? எல்லா மாநிலங்களிலும் அவரவர் மொழியில் தோல்வியுறுபவர் இருக்கத்தான் செய்வர் ஹிந்தியுட்பட அப்போ எல்லா மாநிலங்களும் தம்மொழிகளை கைவிட்டன என்று சொல்லலாமா ???
Rate this:
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
31-மார்-202313:26:42 IST Report Abuse
Svs Yaadum ooreஅப்ப கேரளா மலையாளி மலையாளத்தை கை விட்டான், ஆந்திராவில் தெலுங்கை கைவிட்டார்கள் என்று சொல்லலாமா ?? அங்கெல்லாம் இந்த வெத்து வேட்டு மொழி அரசியல் கிடையாதே ?? ஆந்திராவில் எல்லோரும் ஹிந்தியா பேசுகிறார்கள்?? பல வருடங்களாக நவோதய பள்ளி உள்ள பாண்டிச்சேரி தமிழன் தமிழை மறந்துவிட்டார்களா?? திராவிட தற்குறிக்கு மொழி அரசியல் என்பது சம்பாதிக்க ........
Rate this:
ramtest - Bangalore,இந்தியா
31-மார்-202314:54:07 IST Report Abuse
ramtestஏற்கனவே நவீன அறிவியலை கற்றுக்கொள்ள ஆங்கிலம் படிப்பது அவசியமாகின்றது ... ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் சிரமத்தாலேயே பலர் படிப்பை கைவிட்டதெல்லாம் நடந்ததுண்டு ... அத்தோடு சேர்ந்து ஹிந்தியும் கற்றுக்கொள்ள கட்டாயமாக்க பட்டிருந்தால் இன்னும் பலர் படிப்பை தொடர முடியாமல் கைவிட்டுருப்பார்...இப்போ ஹிந்தி படித்தால் எந்த அறிவியல் பாடத்துக்கு வசதியாக இருக்கும்?? எதுக்கு அதை படித்து தேர்ச்சி பெற்றால் தான் எனக்கு படிப்பை தொடரும் நிலை இருக்க வேண்டும்??இந்தியா என்பது பல மொழிகள் பேசும் நாடு என்பதை மறக்க வேண்டாம் .... எது வெத்து வேட்டு மொழி அரசியல் ??? பல மொழி பேசும் நாட்டில் ஒருமொழியை முன்னிறுத்துவதுதான் அது .....
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
31-மார்-202317:10:56 IST Report Abuse
Barakat Aliஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு பெண் போலீஸ் எனக்கு ஹிந்தி தெரியாது என்று பதில் சொல்கிறார் .... கேவலமாக இல்லை ?...
Rate this:
Cancel
31-மார்-202310:15:06 IST Report Abuse
அப்புசாமி இப்பிடிப் பேசிப் பேசியே இந்தியை வளர்ப்போம். இந்தி திணிப்புக்கு ஆதரவு குடுத்து தமிழை ஒழிப்போம். ஒரே நேசன். ஒரே பாஷா.. ஒரே கல்ச்சர். பானிபூரி கல்ச்சர்.
Rate this:
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
31-மார்-202313:03:43 IST Report Abuse
Svs Yaadum ooreஅப்படியெல்லாம் யாரும் இங்கே பானிபூரி கல்ச்சர் ஹிந்தி திணிக்க முடியாது ..திராவிடம்னா என்ன சாதாரண லெட்டர் பேட் கட்சியா ??.....எப்பேர்ப்பட்ட வரலாற்று இயக்கம்.....திராவிட கல்வி தந்தை ஹிந்தி பள்ளி நடத்தி கல்லா கட்டுவாங்க.. மற்றபடி ஹிந்தியை சும்மா இங்கே திணிக்க அனுமதிக்க மாட்டார்கள் ....வரலாற்றை நல்லா படிங்க .......
Rate this:
Viswam - Mumbai,இந்தியா
31-மார்-202314:23:47 IST Report Abuse
Viswamவடக்கன்ஸ் பிரச்சினை தீவிரமாகி அவங்க வேலைக்கு திரும்பமாட்டானுங்கன்னு தோன்றியவுடன் திராவிட சொம்புகள் ஹிந்தி எங்கள் தேசிய பாஷை பீடா எங்கள் சோறு பானிபூரிகாரன் எங்கள் பாய் பாய் கூவுனாங்களே அது பொய்யா அப்ஸ் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X