தர்மபுரி: பொன்னகரம் வனப்குதியில், தாயை பிரிந்த ஐந்து மாத ஆண் குட்டி யானையை, தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுப்பட்டனர். இதில், பலன் கிடைக்காததால், 16ம் தேதி, குட்டி யானை நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாம் கொண்டுவரப்பட்டு பராமரித்து வந்தனர். கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் ஆலோசனைப்படி யானை குட்டிக்கு திரவ உணவு வழங்கப்பட்டு வந்தது.
யானை பாகன் தம்பதிகள் பொம்மன் - பெள்ளி ஆகியோர் உடனிருந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், குட்டி யானைக்கு நேற்று (மார்ச் 30), பிற்பகல் வயிற்று போக்கு ஏற்பட்டது. கால்நடை மருத்துவ குழு சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு குட்டி யானை உயிரிழந்தது. குட்டி யானை உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.