இலங்கையில் இருந்து கடல் வழியாக நாட்டுபடகு மூலம் சட்டவிரோதமாக மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரைக்கு கடத்திவரப்பட்ட 6 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ராமநாதபுரம் அருகே பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement