ரோம்: சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சுவாச தொற்றால் ரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் போப் பிரான்சிஸ்.
முழங்கால் வலியால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வரும் அவர் தேவாலய பணிகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களை போப் பிரான்சிஸ் சிறப்பாக கவனித்து வந்தார். சமீபத்தில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர், போப் நலம் பெற வேண்டுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.