ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் மார்ச் மாதம் அதன் உயர் விலையில் இருந்து 8 சதவீதத்திற்கு மேல் சரிந்தது. பின்னர் மார்ச் 24 முதல் சற்றே உயர்ந்து வருகிறது. லாபத்தில் வைத்திருந்த பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றது, டெலிகாம் தொழிலில் ஏர்டெல் உடனான போட்டி ஆகியவை சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இருப்பினும், ரிலையன்ஸ் பங்குகள் 10 - 15% ரிட்டர்ன் வழங்கும் என சந்தீப் சபர்வால் கணித்துள்ளார்.
பங்குச்சந்தை நிபுணரான சந்தீப் சபர்வால் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தற்போதைய சூழலில் உலகளவில் பங்கு முதலீட்டைப் பற்றிய அவநம்பிக்கை அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன். உலகளவில் முதலீட்டாளர்களின் பண நிலைகளும் உயர்நிலைக்குச் சென்றுள்ளது. சந்தை பீதியில் உள்ளது. அதானி விவகாரம், பட்ஜெட், அமெரிக்க வங்கிகள் திவால் ஆனது போன்றவற்றால் இந்தியப் பங்குச்சந்தை சரியாக செயல்படவில்லை.
ரிலையன்ஸ் பங்குகள்

ரிலையன்ஸைப் பொறுத்த வரை கடந்த காலங்களில் அதன் தொலைத்தொடர்பு தொழில், சில்லறை விற்பனைத் தொழில், லாபத்தில் தேக்கம், பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்புத் தொழிலில் மார்ஜின் குறைந்தது போன்ற சிக்கல்கள் இருந்தன. ஆனால் அவை அனைத்தும் இப்போது சரியாகிவிட்டன. ரிலையன்ஸின் பங்கு அதன் உச்சத்தில் இருந்து 20% சரிந்துள்ளது. இந்த நிலையில் பங்குகள் சரியான இடத்தில் இருப்பதாக கருதுகிறேன். எனவே இங்கிருந்து அவை 10 - 15% ரிட்டர்ன் வழங்கக் கூடும். இவ்வாறு கூறினார்.