கட்டாய மதமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாக்.,கில் ஹிந்துக்கள் போராட்டம்

Updated : மார் 31, 2023 | Added : மார் 31, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
கராச்சி: பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்தும், அதற்கு எதிராக சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்த இளம் பெண்கள், சிறுமிகள், திருமணமான பெண்கள் ஆகியோர் கடத்தி செல்லப்பட்டு,
Members of Pakistans Hindu community protest forced conversionsகட்டாய மதமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாக்.,கில் ஹிந்துக்கள் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கராச்சி: பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்தும், அதற்கு எதிராக சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.


பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்த இளம் பெண்கள், சிறுமிகள், திருமணமான பெண்கள் ஆகியோர் கடத்தி செல்லப்பட்டு, கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைத்ததாக தெரியவில்லை.



latest tamil news

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதிகேட்டு ஹிந்து அமைப்பினர் அமைதியாக போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் தராவர் இதேஹத் என்ற ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கராச்சி பிரஸ் கிளப் மற்றும் சிந்து சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர். பெண்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும்படியும், அதற்கு சட்டம் கொண்டு வரும்படியும் பதாகைகள் ஏந்தி வந்தனர். போராட்டம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
31-மார்-202322:30:08 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayanana பி பி சி எங்கே? இப்போது கண்கள் மூடிக்கொண்டனவா? யு ஸ் எ ஏன் மௌனம்.
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
31-மார்-202320:57:54 IST Report Abuse
vadivelu ஹிந்துக்கள் இங்கே குடியுரிமை பெற வழி இருக்கிறதே, கேவலப்பட்டு அங்கே ஏன் இருக்கணும்.சீக்கிரமே சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்க போவது அந்த நாடு.
Rate this:
Cancel
Ar Muthuvel - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-மார்-202318:17:38 IST Report Abuse
Ar Muthuvel நான் வரவேற்கின்றேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X