“அதானி குழுமம் கடன்களை அடைப்பதாக நம்ப வைக்க விரும்புகிறது” என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியானது. சந்தை நேரத்திற்கு முன் வெளியான இச்செய்தியால் அதானி குழுமப் பங்குகள் மீண்டும் சரிந்தன. இந்நிலையில், பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என அதானி குழுமம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 28 அன்று பங்குச்சந்தைகளில் வர்த்தக நேரம் துவங்குவதற்கு முன்பு, தி கென் எனும் வர்த்தக செய்தி தளத்தில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் அதானி குழுமம் தனது பங்குகளுக்கு எதிராக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதாக முதலீட்டாளர்கள் நம்ப வேண்டும் என விரும்புகிறது. ஆனால், அப்படி நீங்கள் நம்பக்கூடாது என பல பாயின்ட்களை அடுக்கியிருந்தது. அன்று அதானி குழுமத்தின் அனைத்துப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை தந்த பாதிப்பில் இருந்து அதானி குழுமம் தற்போது தான் மீண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கென் பத்திரிகையில் வெளியான செய்தியும் அதானி குழும பங்குகளை சரிவுக்குத் தள்ளியது.
![]()
|
நாங்கள் வெளியிட்ட தெளிவுப்படுத்தும் அறிக்கையால், மார்ச் 28 அன்று பங்கு விலை மீண்டும் உயர்ந்து பழைய நிலையை அடைந்தது. கென் நிறுவனமும் தனது ஒரிஜினல் செய்தியை மாற்றி எழுதியது. அதானி குழுமம் கடனை திருப்பிச் செலுத்தியது. ஆனால் டிஸ்குளோஷரை சேர்க்கவில்லை என திருத்தியது. முதலீட்டாளர்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற ஏஜென்சிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.