வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எகிறி வரும் கோவிட் தொற்றை எதிர்கொள்ள நாங்கள் முழு அளவில் தயாராக இருக்கிறோம். இதனைப்பற்றி எந்த கவலையும் இல்லை என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

டில்லியில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 300 தொட்டுள்ளது. இதனை தொடர்ந்து கெஜ்ரிவால் மூத்த சுகாதார அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டார் .

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டில்லியில் கோவிட் தொடர்பாக சுகாதார துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளேன். கோவிட் பாதிப்பு பிற மாநிலங்களை விட டில்லியில் குறைவுதான். கோவிட் சோதனை வேகமாக நடந்து வருகிறது. முழு அளவில் தயாராக உள்ளோம். எந்த சூழல் வந்தாலும் இதனை சமாளிக்க நாங்கள் தயார், எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. கோவிட் நோயாளிகளுக்கென 7,986 தனி படுக்கை வசதிகள் தயார். ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதுமானவை கையிருப்பில் வைத்துள்ளோம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.