ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட நரிகுழிஹாடா பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செக்டேம் அருகே மனித கழிவு கொட்டியதை கண்ட கிராம மக்கள் நஞ்சநாடு ஊராட்சிக்கு தகவல் கொடுத்தனர். ஊராட்சி தலைவர் சசிகலா ஊட்டி ரூரல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித், 29, சக்திவேல், 24, ஆகியோர் ஊட்டி சுற்று வட்டாரத்தில் செப்டிக் டேங் கழிவுகளை அகற்றி நரிகுழிஹாடா செக்டேம் அருகே கொட்டியது விசாரணையில் தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.