வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி அரசின் மதுபான முறைகேடு குறித்த வழக்கில், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடில்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் சிசோடியாவின் காவல் ஏப்.,3 அன்று முடிவடைகிறது. அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்நிலையில், அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக மணீஷ் சிசோடியா தரப்பு கூறியுள்ளது.