டிரம்ப்-ஸ்டார்மி சர்ச்சை; 9 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ஆபாசப்பட நடிகை..!| Trump-Stormy Controversy; Porn actress who was sexually harassed at the age of 9..! | Dinamalar

டிரம்ப்-ஸ்டார்மி சர்ச்சை; 9 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ஆபாசப்பட நடிகை..!

Updated : மார் 31, 2023 | Added : மார் 31, 2023 | கருத்துகள் (9) | |
டிரம்ப்-ஸ்டார்மி டேனியல்ஸ் சர்ச்சை காரணமாக தற்போது அமெரிக்க அரசியலில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் டிரம்ப்மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. யார் இந்த ஸ்டார்மி டேனியல்ஸ், டிரம்புக்கும் இவருக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது, இவரது பின்னணி என்ன எனப் பார்ப்போம். முன்னதாக ஸ்டார்மி டேனியல்ஸ்
Trump-Stormy Controversy; Porn actress who was sexually harassed at the age of 9..!  டிரம்ப்-ஸ்டார்மி சர்ச்சை; 9 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ஆபாசப்பட நடிகை..!

டிரம்ப்-ஸ்டார்மி டேனியல்ஸ் சர்ச்சை காரணமாக தற்போது அமெரிக்க அரசியலில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் டிரம்ப்மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. யார் இந்த ஸ்டார்மி டேனியல்ஸ், டிரம்புக்கும் இவருக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது, இவரது பின்னணி என்ன எனப் பார்ப்போம்.


முன்னதாக ஸ்டார்மி டேனியல்ஸ் 'ஃபுல் டிஸ்குளோஷர்' என்கிற தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள பேட்டல் ரோக் பகுதியில் பிறந்தவர் ஸ்டார்மி டேனியல்ஸ். இவரது இயற்பெயர் ஸ்டிஃபானி கிரகோரி கிளிஃபோர்ட். இவர் குழந்தையாக இருக்கும்போதே இவரது தாயும் தந்தையும் விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து தனது தாயாரிடம் வளர்ந்தார் ஸ்டார்மி. ஏழ்மை சூழலில் வளர்ந்த அவர், தனது ஒன்பதாவது வயதிலேயே பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானார். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே இரவு ஸ்ட்ரிப் கிளப்பில் நிர்வாண நடனமாடத் துவங்கினார். பின்னர் ஆபாசப் படங்கள் பலவற்றில் நடித்து பொருளாதார ரீதியாக முன்னேறினார். தற்போது 44 வயதாகும் அவர், மூன்றுமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். நான்காவதாக ஆபாசப்பட நடிகர் பரெட் பிளேடை கடந்த ஆண்டு திருமணம் முடித்த ஸ்ட்ராமிக்கு ஒரு மகள் உள்ளார்.


latest tamil news


அமெரிக்க ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மற்றும் அரசியல் தலைவர் டொனால்டு டிராம்ப்பை கடந்த 2006 ஆம் ஆண்டு கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது முதன்முறையாக சந்தித்தார். அப்போது துவங்கி டிரம்ப் ஸ்ட்ராமியை அவரது இச்சைக்கு கட்டாயப்படுத்தி பயன்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் டிரம்ப் உடனான உறவு மிக மோசமானதாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு ஸ்டார்மி லூசியானா தொகுதியில் போட்டியிட முற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்ட்ராமி உடனான டிரம்பின் தொடர்பை மக்களிடம் இருந்து மறைக்க டிரம்ப் ஸ்ட்ராமிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் அரசு பணத்தை ஸ்ட்ராமிக்கு அளித்ததாக ஸ்ட்ராமி தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். தற்போது டிரம்பின் வழக்கறிஞரும் ஸ்ட்ராமிக்கு பணம் கொடுத்ததை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து சட்டவிரோதமாக அரசு பணத்தை சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டதாக டிரம்ப்மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தற்போது டிரம்பிடம் இதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குற்றம் நிரூபணமானால் டிரம்புக்கு இரண்டாண்டுகள்வரை சிறை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி நடந்தால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் டிரம்பால் போட்டியிட முடியாமல் போகலாம். ஆனால் அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிட்டு மீண்டும் வெல்வேன் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X