ஓடும் காரில் பெண் கூட்டு பலாத்காரம்: பெங்களூருவில் 4 பேர் கைது

Updated : மார் 31, 2023 | Added : மார் 31, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெண்ணை காருக்குள் இழுத்து, கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கடந்த 25 ம் தேதி கோரமங்களாவில் என்ற இடத்தில் உள்ள தேசிய விளையாட்டு பூங்காவில் இரவு நேரத்தில், ஆண் நண்பர் ஒருவருடன் பெண் ஒருவர் பேசி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், இருவரையும் அழைத்து இரவில் தனியாக பேசுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து
Bengaluru Woman Dragged From Park, Gang-Raped In Moving Carஓடும் காரில் பெண் கூட்டு பலாத்காரம்: பெங்களூருவில் 4 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெண்ணை காருக்குள் இழுத்து, கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 25 ம் தேதி கோரமங்களாவில் என்ற இடத்தில் உள்ள தேசிய விளையாட்டு பூங்காவில் இரவு நேரத்தில், ஆண் நண்பர் ஒருவருடன் பெண் ஒருவர் பேசி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், இருவரையும் அழைத்து இரவில் தனியாக பேசுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து உள்ளார்.


உடனடியாக ஆண் நண்பர் அங்கிருந்து சென்ற நிலையில், அந்த நபர், மொபைல் மூலம் நண்பர்கள் 3 பேரை அழைத்துள்ளார். 3 பேரும் காரில் வந்தனர். அந்த பெண்ணை காரில் ஏற்றி நகர் முழுவதும் சுற்றி உள்ளனர். அப்போது 4 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு மறுநாள் அதிகாலை நேரத்தில் வீடருகே விட்டு சென்ற அவர்கள், சம்பவம் குறித்து போலீசில் தெரிவித்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.



latest tamil news


பாதிக்கப்பட்ட பெண், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசிலும் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் சதீஸ், விஜய், ஸ்ரீதர், கிரண் என தெரியவந்துள்ளது. 2 பேர் தனியார் அலுவலகத்தில் தொழிலாளியாகவும், ஒருவர் கால் சென்டரிலும், மற்றொருவர் எலக்ட்ரீசியனாகவும் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
31-மார்-202321:12:01 IST Report Abuse
Palanisamy Sekar ஒரே ஒரு முறை துப்பாக்கியால் நான்கு பேரையும் என்கவுண்டர் செய்து முடியுங்களேன்..அப்புறம் பாருங்கள்..நாட்டில் அனைவரும் அடங்கிப்போவார்கள். இதுவரையிலும் அப்படி செய்யாத காரணத்தால்தான் வெறிகொண்டு அலைகின்றார்கள் . சட்டம் நீதி என்று இன்னமும் இந்த விஷயத்தில் தேமேன்னு கிடக்காதீர்கள். பொதுவெளியில் சுட்டு பொசுக்குங்கள். போலீசின் கவ்ரவம் காப்பாற்றப்படும். நாட்டில் ஒழுக்கம் நீடிக்கும். எவ்வளவு சம்பவங்கள் நடந்தும் கூட அடங்கவே மாட்டார்கள் என்றால் உங்கள் சட்டத்தில்தான் குறை..போலீசுக்கு துப்பாக்கி வேண்டாம் கொடுக்காதீர்கள். சுடாத துப்பாக்கி இருந்தென்ன இல்லாமல் போனால்தான் என்ன
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
31-மார்-202320:39:21 IST Report Abuse
Ramesh Sargam இரவு நேரத்தில் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பூங்காவில் அந்த பெண் செய்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அப்படி சொல்வதால் நான் குற்றம் செய்தவர்களை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel
31-மார்-202320:10:09 IST Report Abuse
அப்புசாமி பா.ஜ அரசில்.பெண்கள் சுதந்திரமா, பாதுகாப்பா இருக்காங்க. இரட்டை இன்ஹ்சின் ஆட்சி அங்கே சக்கப் போடு போடுது. அண்ணச்மலை ஐ.பி.எஸ் வேற கர்னாடகா தேர்தல் பொறுப்பாளர். கைதட்டி வரவேற்போம்.
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
31-மார்-202321:38:57 IST Report Abuse
Priyan Vadanadசுதந்திரத்தை எவராவது தவறாக பயன்படுத்தினால் யாருக்கு நஷ்டம்? கண்ணியத்துடன் கூடிய சுதந்திரமே உண்மையான சுதந்திரம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X