வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி ஏப். 09 ம் தேதி கர்நாடகா செல்கிறார்.
கர்நாடகா சட்டசபைக்கு வரும் மே.10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஓட்டு எண்ணிக்கை மே.13-ல் நடக்கிறது.
இத்தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ. வியூகம் வகுத்து வருகிறது. மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
![]()
|
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி வரும் ஏப்.09 ம் தேதி கர்நாடகா வருகிறார். பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement