வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடர் நடிகைகள், ரஷ்மிகா மடோனா, தம்மன்னா ஆகியோரின் நடன நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் 2008ல் துவங்கியது. இதன் 16வது தொடர் இன்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கோலாகலமாக துவங்கியது. துவக்க நிகழ்ச்சியில் நடிகைகள் ரஷ்மிகா மந்தன்னா, தம்மன்னா ஆகியோர் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தனர்.
![]()
|
இத்தொடரில் சென்னை, கோல்கட்டா, டில்லி உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 74 போட்டிகள் நடக்க உள்ளன. இன்று ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் (குஜராத்) நடக்கும் துவக்க போட்டியில் சென்னை, குஜராத் அணிகள் மோதுகின்றன. பைனல் வரும் மே 28ல் நடக்க உள்ளது.