நல்வாழ்விற்கான வழிமுறைகள்
நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளைப் பின்பற்றுங்கள். வாழ்வில் நலம் உண்டாகும்.
* உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டடம் கட்டி தங்குவதற்கு சிந்தனை செய்யாதீர்கள்.
*உலக ஆசை பாவங்களின் வேராகும். அதிகம் ஆசைப்பட்டால் அது உன் வாழ்வை தலைகீழாக்கி விடும்.
* கூட்டாக சேர்ந்து வாழுங்கள். பிரிந்து செல்லாதீர்கள். சுவனம் செல்ல விரும்புபவர்கள் வாழ்வில் ஒற்றுமையை கடைபிடியுங்கள்.
*மற்றவருக்காக விட்டுக் கொடுப்பவர்கள், பிறரது குற்றம், குறைகளை பொறுப்பவர்கள் இறைவனின் கருணையை பெறுவர்.
*எண்ணம் பரிசுத்தமானதாக இருந்தால் சிறிய நன்மைகள் கூட பெரிய நன்மைகளாக மாறி விடும்.
* பொது இடம், நடைபாதை, மரத்தடிகளில் அசுத்தம் செய்யாதீர்கள். அதனால் இறைவன் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
* கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வது தர்மம்.
*எவர் கடனை ஒழுங்காகத் திருப்பித் தருகிறாரோ அவரே உங்களில் மேலானவர்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement