வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர்,: தஞ்சாவூர் மாநகராட்சியில், இந்த நிதியாண்டில், 4.41 கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டாக உள்ளது என மாநகராட்சி மேயர் ராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில், மேயர் ராமநாதன் தலைமையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கணக்கு குழுத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான வெங்கடேஷ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
முன்னதாக, மேயர் பேசியதாவது;தமிழகத்தில், தஞ்சாவூர் மாநகராட்சி முதல் முறையாக அனைத்து கடன்களையும் அரசுக்கு திரும்ப செலுத்தி கடனில்லா மாநகராட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பெறப்பட்ட கடன் தொகைக்கு தவணை திரும்ப செலுத்தும் விதமாக 2022 - 23ம் நிதியாண்டில் 2.72 கோடி ரூபாயை திரும்ப செலுத்தப்பட்டது.
இதைபோல, இந்த நிதியாண்டில் மீதமுள்ள 6.01 கோடி ரூபாயை திரும்ப செலுத்தப்படவுள்ளது.
கடந்த நிதியாண்டில், 7.95 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், முதல் முறையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கட்டப்பட்ட வணிக கட்டடங்களில் வரியில்லா இனம் தலைப்பில் முந்தைய வருவாயை விட 10 மடங்கு வருவாய் உயர்த்தும் விதமாக, 2.50 கோடியிலிருந்து 25 கோடி ரூபாய் அளவில் வருவாய் உயர்வு செய்யப்பட்டுள்ளது.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்கு தொகை மற்றும் அரசு மானியம் சேர்த்து மாநிலத்திலேயே அதிக அளவில் 2022- 23ம் ஆண்டு 7.96 கோடி ரூபாயில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. வரும் 2023- 24ம் நிதியாண்டில் 9.94 கோடி ரூபாயில் பணிகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிதியாண்டுக்கு 4.41 கோடி ரூபாய்க்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், 284.70 கோடி ரூபாய்க்கு வரவு எதிர்பார்க்கப்பட்டு, 280.28 கோடி ரூபாய்க்கு செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
51 வார்டுகளில்,அரசு பள்ளிகள் படித்த மாணவர்களுக்கு,முத்து தேர்வுகளுக்கு தயார் படுத்தும் விதமாக,அவர்கள் கல்வி கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மாநகராட்சியில்,கடைகளை மேலும் எடுத்துள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய்,இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவித்தார்.