வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் இன்று முதல்வர் பொம்மையின் வாகனத்தை நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர்.
கர்நாடக சட்டசபைக்கு வரும் மே.10-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேர்தல் பறக்கும் படையினர், மாநில எல்லை பகுதிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
![]()
|
இந்நிலையில் சிக்கபல்லாபுரம் மாவட்டம் தொட்டாபல்லாபூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகதி சுப்ரமணியா கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு முதல்வர் பசவராஜ் பொம்மை தனது காரில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது தேர்தல் பறக்கும்படையினர் காரை நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனைக்குப் பின்னர் காரை விடுவித்தனர். முதல்வராக இருந்தாலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கடமை என்பதால் முதல்வர் பொம்மை காரும் தப்பவில்லை. இது குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.