ஜோகன்னர்ஸ்பர்க் : காதலியை சுட்டுக் கொன்ற, தென் ஆப்ரிக்க விளையாட்டு வீரர், ஆஸ்கார் பிஸ்டோரியஸிற்கு பரோல் வழங்க கோர்ட் மறுத்துவிட்டது.
தென் ஆப்ரிக்காவை சேர்ந்த, பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ், 26,. முழங்கால்களுக்கு கீழ் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட இவர், 200 மீட்டர் மற்றும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், உலக சாதனை படைத்தவர். 'பிளேடு ரன்னர்' என செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இவரது, காதலி ரீவா ஸ்டீன்கேம்ப், 30, 2013 பிப்.14-ம தேதி காதலர் தினத்தன்று திருடன் என, தவறுதலாக நினைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். கொலை வழக்குபதிவானது, வழக்கு விசாரணையில் 2017-ம் ஆண்டு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தன்னை பரோலில் விட வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதற்கு ரீவா ஸ்டீன்கேம்ப்பின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி பரோல் வழங்க மறுத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement