சென்னை: கலாஷேத்ரா விவகாரத்தில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அடையாரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இதுவரை யாரும் எழுத்து பூர்வ புகார் தரவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் என்பவர் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement