சென்னை: தமிழகத்தில் 139 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இது குறித்து அவை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் 139 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 88 பேர் குணம் 777 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 38 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் கோவையில் தலா 14 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.