வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகா பா.ஜ. எம்.எல்.ஏ.ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடக சட்டசபைக்கு மே. 10-ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ. எம்.எல்.ஏ., என்.ஓய். கோபாலாகிருஷ்ணா அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார்.
![]()
|
விரைவில் காங்., கட்சியில் இணைய உள்ளதாகவும், தற்போது உள்ள குடிலிகி தொகுதியில் மீண்டும் போட்டியிட காங். கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக என்.ஓய். கோபாலாகிருஷ்ணா பா.ஜ.சார்பில் போட்டியிட சீட் கேட்டதாக கூறப்படு்கிறது. இருப்பினும் அவரது வயது மற்றும் ஊழ்ல் புகார் காரணம் கூறி கட்சி சீட் தர மறுத்தது. குறிப்பிடத்தக்கது.