கோயம்பேடு,'ரூட் தல' பிரச்சினை யில், பையில் பட்டா கத்திகள் வைத்திருந்த கல்லூரி மாணவரை கைது செய்தனர்.
கோயம்பேடு, ரோகிணி திரையரங்கம் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் சிலர் நின்றிருந்தனர்.
அந்த வழியாக கோயம்பேடு போலீசார் வந்த போது, மாணவர்கள் சிதறி ஓடினர். இதில், ஒருவர் மட்டும் சிக்கினார். அவரது பையை சோதனையிட்ட போது, நான்கு பட்டாக்கத்திகள் இருந்தன.
மாணவரை கைது செய்து விசாரித்ததில், வெற்றிவேல், 19, என தெரிந்தது.
மாணவர்களுக்குள் 'ரூட் தல' பிரச்னை இருந்ததால், பட்டாக்கத்திகள் கொண்டு வந்தது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.