சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால், 2020 டிச., முதல், எம்.ஆர்.சி., நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையகர அலுவலகத்தில், தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
சிந்தாதிரிப்பேட்டையில் கட்டட புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்தால், அங்கு, வரும் 3ம் தேதி முதல், சென்னை குடிநீர் வாரியம் தலைமை அலுவலகம் செயல்படும்.
பொதுமக்கள் 044 - 4567 4567 என்ற எண்ணில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.