பினராயி விஜயனின் நிதி முறைகேடு வழக்கு: 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றம்

Updated : ஏப் 01, 2023 | Added : ஏப் 01, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
திருவனந்தபுரம், நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக பினராயி விஜயன் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகளின் தீர்ப்பில் மாறுபட்ட கருத்து இருந்ததால், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. 20 லட்சம் ரூபாய்கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சியில்
Pinarayi Vijayan financial misappropriation case transferred to 3-judge bench  பினராயி விஜயனின் நிதி முறைகேடு வழக்கு: 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றம்


திருவனந்தபுரம், நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக பினராயி விஜயன் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகளின் தீர்ப்பில் மாறுபட்ட கருத்து இருந்ததால், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.


20 லட்சம் ரூபாய்



கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சியில் முதல்வர் பேரிடர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.


latest tamil news


மறைந்த தேசியவாத காங்., தலைவர் உழவூர் விஜயனின் குடும்பத்தினருக்கு, இந்த நிவாரண நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல், கொடியேறி பாலகிருஷ்ண னின் பாதுகாப்பு அலுவலர் பிரவீனின் குடும்பத்துக்கும் 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு ஆளானது.

இது குறித்து, மாநில லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணை முடிந்து ஓராண்டு ஆன நிலையில், வழக்கின் தீர்ப்பு வெளியாகாமல் இருந்தது.


மாறுபட்ட கருத்து



சிவில் நடைமுறை சட்டப்படி விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலையில், அது வெளியாகாதது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் கேரளா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:

கேரள லோக் ஆயுக்தா சட்டம், 1999ன் விதிகளின் கீழ், கேபினட் உறுப்பினர் என்ற முறையில், பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுப்பதிலான அடிப்படை பிரச்னையில், நீதிபதிகளான எங்களிடையே மாறுபட்ட கருத்து உள்ளது. ஆகையால் இந்த வழக்கு, மூன்று நீதிபதி கள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

01-ஏப்-202316:58:24 IST Report Abuse
ஆரூர் ரங் மலையாளத்தில் பிணராயி விஜயன் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
01-ஏப்-202312:46:31 IST Report Abuse
Srivilliputtur S Ramesh இத்தனை குற்றச்சாட்டுக்கள் இருந்தும் இந்த "பிரியாணி விஜயன்" ஏன் பதவி விலகவில்லை
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-ஏப்-202309:30:03 IST Report Abuse
Kasimani Baskaran இதனால்த்தான் லோக் ஆயுக்தா தமிள்நாட்டில் வராது... ஓரிரண்டு யோக்கியர்கள் பதவியில் அமர்ந்துவிட்டால்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X