ஹைதராபாத்,:தெலுங்கானாவில் வரலாறு காணாத அளவில் வெயில் பதிவாகி வரும் சூழலில், இங்குள்ள சில மாவட்டங்களுக்கு மஞ்சள் 'அெலர்ட்' விடப்பட்டு உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இங்குள்ள ஹைதராபாத், செகந்திராபாத் உள்ளிட்ட இடங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாவதால், சமீபத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது.
![]()
|
இந்நிலையில், ஹைதராபாதில் அதிகபட்ச வெப்பநிலை உயர்ந்ததால், இந்த ஆண்டின் வெப்பமான நாளாக நேற்றைய தினம் பதிவானது.
இங்குள்ள பிக்னுார் பகுதியில் அதிகபட்சமாக 43.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நேற்று பதிவானது.
இந்நிலையில், ஹைதராபாத் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் மேலும் சில தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தெலுங்கானாவில் நாளை வரை அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது-.
ஹைதராபாத் நகரில் நாளை மறுநாள் வரை வெப்ப அலை அதிகமாக இருக்கும். குறிப்பாக 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும். கடும் அனல் காற்று வீசும் என்பதால், தெலுங்கானாவின் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிகளவில் வெயில் சுட்டெரித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை குறிக்கும் மஞ்சள் அெலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement