ஊட்டி : ஊட்டி அருகே மனித கழிவுகளை வனப்பகுதியில் கொட்டிய, தஞ்சாவூரை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். தடுப்பணை அருகே மனிதக்கழிவை கொட்டியதால், குடிநீர் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட நரிகுழிஹாடா பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ள தடுப்பணை அருகே, வனப்பகுதியில் மனிதக் கழிவு கொட்டப்பட்டு இருந்ததை கண்ட கிராம மக்கள், நஞ்சநாடு ஊராட்சிக்கு தகவல் கொடுத்தனர்.
ஊராட்சி தலைவர் சசிகலா, ஊட்டி ரூரல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
![]()
|
அதில், தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித், 29, சக்திவேல், 24, ஊட்டி சுற்று வட்டாரத்தில் இருந்து மனிதக்கழிவுகளை தொட்டியில் இருந்து அகற்றி, நரிகுழிஹாடா தடுப்பணை அருகே வனத்தில் கொட்டியது தெரிந்தது.
வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்தனர். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, நஞ்சநாடு ஊராட்சி சார்பில் தடுப்பணையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு சுத்திகரிப்பு பணி நடந்தது.
மக்கள் கூறுகையில், 'ஊட்டி சுற்றுப்புற பகுதி களில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், ேஹாட்டல், காட்டேஜ், குடியிருப்புகளில் அகற்றப்படும் மனிதக் கழிவு களை தொட்டிகளில் நிரப்பி வனப்பகுதியில் பலர் கொட்டி வருகின்றனர். இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.