வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாகர்கோவில்: கேரள மாநிலத்தில் இன்று முதல் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது. இதனால், அம்மாநில மற்றும் கர்நாடகா எல்லையிலுள்ள தமிழக பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை அதிகரிக்கும்.
கேரளாவில் இன்று முதல் பெட்ரோல் 1 லிட்டர் 109.98; டீசல் 98.52 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 103.85; டீசல் 95.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே களியக்காவிளை, குமுளி, ஆரியங்காவு போன்ற எல்லையோர தமிழக பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை அதிகரிக்கும் என, விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
![]()
|
தமிழகத்தில் விலை குறைவாக இருப்பதால், கேரளாவில் இருந்து சுற்றுலா மற்றும் இதர பணிகளுக்காக வரும் வாகனங்கள், தமிழக எல்லையில் பெட்ரோல், டீசல் டேங்கை நிரப்பும்.