வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில் ஏப்.,8 துவங்கி 10 வரை நடக்கிறது.
ஏப்., 8 ல் துவங்கி 10 வரை தினம் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை காலை, மாலை என இரண்டு அமர்வுகளாக பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்படும்.
இதில் நீட், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான 'டிப்ஸ்'கள், ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், ஓப்பன் A1, குவாண்டம் கம்யூட்டிங், ஐஓடி, கிளவுட் கம்ப்யூட்டிங், மெட்டாவர்ஸ், சி.எஸ்., ஐ.டி., டேட்டா சயின்ஸ், பிக் டேட்டா, மிஷின் லேர்னிங், கலை அறிவியல் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளும் வாய்ப்புகளும், சட்டம், சி.ஏ., படிப்பதால் என்னென்ன வாய்ப்புகள், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மற்றும் பிரத்யேக கல்வி நிறுவனங்கள் போன்ற தலைப்புகளில் 20க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், நிபுணர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர்.
![]()
|
உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கும் பதில் அளிப்பர்.
'வரும் காலங்களில் ஆளப்போகும் துறைகள்' என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, 'உதவித் தொகைகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள்' குறித்து கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், 'டிரோன் தொழில்நுட்பம்' குறித்து இயக்குனர் செந்தில்குமார், 'தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகள்' என்ற தலைப்பில் பியூப்பிள் மாக்கப் ஸ்டுடியோ நிறுவனர் சுரேஷ்குமார், 'வேலைவாய்ப்பு கல்வி' குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் ஆலோசனை வழங்குகின்றனர்.
![]()
|
கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் பரிசாக வழங்கப்படும்.
* கல்வி நிறுவன ஸ்டால்கள்:
எந்த கல்வி நிறுவனங்களில் என்ன படிப்புகள், கட்டணங்கள், கட்டமைப்பு வசதிகள் உள்ளன என்பது உள்ளிட்ட முழு விவரங்கள் அறிய தமிழத்தில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களின் 80க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெறும்.
இதன் மூலம் உயர்கல்வியை தேர்வு செய்வதற்கான அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா விஸ்வ வித்யாலயம் உடன் கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், கே.எம்.சி.ஹெச் அன்ட் டாக்டர் என்.ஜி.பி., இன்ஸ்டிடியூஷன்ஸ், கோவை எஸ்.என்.எஸ் இன்ஸ்டிடியூஷன்ஸ், என்.பி.ஏ., ஸ்ரீசக்தி இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் இன்ஜி., அன்ட் டெக்னாலஜி ஆகியன இணைந்து வழங்குகின்றன. அனுமதி இலவசம்.
உயர்கல்வி குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் நேரில் விடை காண உடனே www.kalvimalar.com ல் பதிவு செய்யுங்கள். 91505 74441 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் 'ஹாய்' என்ற மெசேஜ் அனுப்பி பதிவு செய்யலாம்.