வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை : தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த தாக்கலான வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி திம்மராஜபுரம் செல்வகுமரன் தாக்கல் செய்த பொதுநல மனு:
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி 12 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்த தேசிகநாதன் 2022 ஆக.,12 ல் இறந்தார்.
![]()
|
உள்ளாட்சி அமைப்புகளில் காலி இடம் ஏற்பட்டால் சட்டப்படி 6 மாதங்களில் இடைத் தேர்தல் நடத்த வேண்டும். 12 வது வார்டுக்கு இடைத் தேர்தல் நடத்தவில்லை. இதனால் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலை நடத்தக் கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு செல்வகுமரன் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு மாநில தேர்தல் ஆணையம், பேரூராட்சிகளின் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஏப்.,13 க்கு ஒத்திவைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement